सहयोगीSahaYogi

The greatest service and sacrifice a person can make for our motherland is to serve in the defense and armed forces, where one can protect the boundaries of the nation and protect the citizens from invading enemy. A lot of people desire to serve in the Army, Airforce and Navy but do not get selected.

HOW YOU CAN SERVE THE NATION THROUGH SAMSKRITAM PROPAGATION

                        Our country was under foreign rule for nearly a thousand years and we gained political freedom 70 years ago. However the damage done to the cultural fabric of Bharata varsha is yet to be repaired. It is not easy to reconstruct in a short time what was damaged over a thousand years. One of the fields of national rebuilding is Samskritam propagation through which we can bring back the treasures of knowledge that was lost to us during the past several hundreds of years.


 

HOW YOU CAN BE OF HELP!

                         One can devote as little as 3 months as a full time volunteer to help propagate Samskritam learning among the public and in schools. Young people in the age group of 20-30 can devote 2 years as full time volunteers to propagate Samskritam. Your maintenance expenses will be taken care of by Samskrita Bharati. To gain political freedom, thousands of people discarded their job and profession and plunged into the freedom struggle, Now to liberate our country from the grip of alien culture and rejuvenate Bharatiya Samskar and rebuild Bharat, give your time and if possible a part of your resources.



Jayatu Bharatam, Jayatu Samskritam.

ஸம்ஸ்க்ருத மொழியை மக்கள் அனைவரிடமும் கொண்டுசெல்வதன் மூலம் தாய்நாட்டிற்கு எப்படி சேவை செய்ய முடியும்?


நமது தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறைகளில் பணியாற்றுவது என்பது, உன்னதமான தொண்டாகவும், தியாகமாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், இத்துறையைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எல்லைப் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டு, வெளிநாட்டினரின் படையெடுப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார்கள். மக்கள் பலர் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணிபுரிய விரும்பினும், அவர்கள் அனைவரும் அவற்றில் தேர்ச்சி பெற இயல்வதில்லை.


நமது தேசமானது, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக அயலாரிடம் அடிமைப்பட்டிருந்தது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அரசியல் விடுதலையைப் பெற்றோம். ஆனால், நமது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சீரழிவிலிருந்து இன்னும் நமது தேசம் மீண்டு விடவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இந்த பண்பாட்டுத் தாக்குதல்களிலிருந்து, குறுகிய காலத்திற்குள் மீண்டு வருவதென்பது எளிதானதல்ல. எனினும், நமது தேசத்தை மீண்டும் பொலிவோடு திகழச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். 


அந்தப் புனிதப்பணியில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குவது, ஸம்ஸ்க்ருத மொழியை நாடெங்கும் கொண்டு செல்லும் மகத்தான சேவையாகும். இதன்மூலம், பல நூற்றாண்டுகளில் நாம் இழந்த ஞானப் பொக்கிஷங்களை நம்மால் மீட்டெடுக்க முடியும். இந்த அரிய பணியில் தங்களின் பங்கு என்ன? 


முழுநேரத் தன்னார்வத் தொண்டராக மூன்று மாதங்கள் செயல்படுவதின் மூலம், ஸம்ஸ்க்ருத்தை பொதுமக்களுக்கும், பள்ளிகளுக்கும் கொண்டுசெல்ல முடியும். 


20-30 வயதுக்குள் இருப்பவர்கள் இரண்டு வருடங்களுக்கு முழுநேர ஸம்ஸ்க்ருதத் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றுவதன் மூலம் ஸம்ஸ்கிருதத்தை மக்கள் எல்லோருக்கும் கொண்டு செல்லும் புனிதப்பணியில் ஈடுபடலாம். 


அத்தகைய தன்னார்வத் தொண்டர்களின் பராமரிப்புச் செலவுகள் அனைத்தையும் "ஸம்ஸ்க்ருத பாரதி" அமைப்பு ஏற்றுக் கொள்ளும். நமது தேசத்தின் விடுதலைக்காக பலர் தங்கள் பணியையும், தொழிலையும் துறந்து விட்டு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தற்போது, வெளிநாட்டுக் கலாச்சார மோகத்திலிருந்து நமது தேசத்தை மீட்டு, பண்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புனிதப்பணிக்காக தங்களது பொன்னான நேரத்தையும், பொருளுதவியையும் அளிக்கலாம்.


வெல்லட்டும் பாரதம்!  வெல்லட்டும் ஸம்ஸ்க்ருதம்!

ஸம்ஸ்க்ருத பாரதி - தமிழ்நாடு

जयतु संस्कृतं विश्वपोषकम्।

சமுதாய சேவை செய்ய அரிய வாய்ப்பு !

  • தேசத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கும் ஸம்ஸ்க்ருதத்தை பரப்பும் "ஸம்ஸ்க்ருத பாரதி" அமைப்பிற்கு முழுநேர ஊழியர்கள் தேவை (சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுதல் வேண்டும்)
  • 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண், பெண் இருபாலரும் வரவேற்கப்படுகிறார்கள். 
  • ஸம்ஸ்க்ருத மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. 
  • ஸம்ஸ்க்ருத பாரதி அலுவலகம், அமைப்புப் பணிகளில் பயிற்சி அளிக்கப்படும்.
  • உணவு, தங்குமிட ஏற்பாடு உண்டு. 
  • சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், முதலிய பல்வேறு நகரங்களில் தங்கி சேவை செய்ய வாய்ப்பு.
விருப்பமுள்ளவர்கள்

 செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 14, 2022 வரை நடைபெறவுள்ள தன்னார்வலர்களுக்கான நேரடி முகாமில் கலந்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.


செப்டம்பர் 24, 2022 இரவு 10 மணிக்குள்  முகாமிற்கு வந்துவிடவும். 

தங்கும் வசதி மற்றும் உணவு வசதி உண்டு.

இடம்:
"பாஷ்யம்",ஸம்ஸ்க்ருத பாரதி, மகாதானபுரம், கரூர் மாவட்டம். 

இந்த முகாம் முற்றிலும் இலவசமானது.
  மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

9442323546

7598467546

7200987215

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.